OPS ready passed away

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் (95) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத்தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

nn

தேனி மாவட்டம்,பெரிய குளம்அக்ரஹாரம் தெருவில் ஓபிஎஸ்-இன் வீடு உள்ளது. இந்த வீட்டில்தான் ஓபிஎஸ்-இன் தாயார் பழனியம்மாள்வாழ்ந்து வந்தார்.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். மீண்டும்கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திடீரெனஉடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்சற்று நேரத்திற்கு முன்பு காலமானார்.

Advertisment