Advertisment

“செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்து விட்டார்” - ஜெயக்குமார் பேட்டி

ops loss everything..Had he stayed here he would have got the respect he deserved

Advertisment

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனோடு சேர்ந்து ஓபிஎஸ் அனைத்தையும் இழந்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சி பிறந்த நாளையொட்டிஅவரது சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “ஓ.பன்னீர் செல்வத்திடம் இருப்பது ஒரு கோஷ்டி மட்டுமே. செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா.. வஞ்சகன் தினகரனடா.. அந்த தினகரனோடு கூட்டு சேர்ந்து பாழாக போய்விட்டார் ஓபிஎஸ். இங்கு ஒற்றை தலைமையைஏற்றுக்கொண்டு இங்கேயே இருந்திருந்தால் அவருக்கு உரிய மரியாதை கிடைத்திருக்கும்” எனக் கூறினார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு பிளவுகளை சந்தித்த அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து மாறி மாறி விமர்சித்துக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது

admk jeyakumar ops_eps
இதையும் படியுங்கள்
Subscribe