மீட்பு பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு வருகை புரிந்த துணை முதல்வர் ஓபிஎஸ் அங்கே குழுமியிருந்த அமைச்சர்களுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தமிழகம் மட்டுமின்றி நாடு தழுவிய அளவில் இந்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் போடப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு நிலங்களில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் மூடப்படும். அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பிறகு இந்த மீட்பு பணி முழுவீச்சில் தொடங்கப்பட்டது. அமைச்சர்கள், அதிகாரிகள் நேரடியாக களத்தில் இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 38 அடி ஆழம்வரை தோண்டப்பட்டுள்ளது இன்னும் 45 அடிக்குதுளையிடவேண்டும் என்றார்.