துணை முதல்வர் ஒபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகாலையில் மழை காற்றுடன் வீசிய கஜாபுயல் தேனி மாவட்டத்திலும் வீச தொடங்கியதின் மூலம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறைஅணை நிரம்பி பெரியகுளம் நகரில் உள்ள வரகாநதி ஆறு நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரியகுளம் நகரில் பல இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் பகுந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதுபோல் ஒபிஎஸ் தொகுதியில் உள்ள குரங்கனி, கொட்டகுடி ஆறு நிரம்பியதால் ஆற்று ஓரங்களில் உள்ள பி.சி.பட்டி, தேனி பகுதிகளில் ஆற்று ஓரங்களில் உள்ள மக்களை முன் கூட்டியே தேனி நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். அப்படி இருந்தும் அந்த மக்கள் குடியிருந்த வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அது போல் ஜவகர் தெரு உள்பட சில பகுதிகளிலும் உள்ள வீடுகளும் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. அதுபோல் போடி நகரிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள்பெரிதும்பாதிக்கப்பட்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இப்படி கஜாபுயல் மூலம் ஒபிஎஸ்சின் சொந்த ஊர் மக்களும், தொகுதி மக்களும் பெரிதும் பாதிகப்பட்டனர் என்ற விஷயம் ஒபிஎஸ் காதுக்கு எட்டஉடனே தேனிக்கு வந்த ஓபிஎஸ்அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட்டுஉடனே பெரியகுளம் சென்று பார்வையிட்டார். அப்பொழுது சிறு வயதில் தன் தம்பி ராஜாவுடன் தென்கரை, வடகரைக்கு நடுவே ஓடக்கூடிய வரகாநதி ஆற்றில்தான் குளிப்பார்களாலாம். அப்படிப்பட்ட வரகாநதி ஆறு 40 வருடங்களுக்கு பிறகு நிரம்பி ஓடுவதை ஒபிஎஸ் பார்த்து பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டாராம். அதன் பின் தேனி தனியார் திருமணமண்டபத்தில் தங்கி இருந்த கஜா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலம்வழங்கி அனைவரையும் சாப்பிட சொன்னார்.
அதன்பின்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளும் வழங்க வேண்டும் என உடனிருந்த மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்க்கு உத்தரவிட்டுஉறுதி கூறிவிட்டுசென்றார். இப்படி திடீரென கஜாபுயல் தேனி,திண்டுக்கல் மாவட்டத்தை தாக்கியதால்பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.