Advertisment

ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றி தேர்வு... அதிமுக அறிவிப்பு!

OPS, EPS selection without competition ... AIADMK announcement

Advertisment

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் டிசம்பர் 7ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 03/04/2021 ஆம் தொடங்கியது. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குக் கடந்த 04/12/2021 காலை 11.30 மணிக்குச் சென்ற அதிமுகவின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும், கூட்டாகத் தேர்தல் நடத்தும் ஆணையாளர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பினை அதிமுக தேர்தல் ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.

elections admk ops_eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe