நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (26/07/2021) அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது, தமிழக அரசியல் சூழல், நீட் தேர்வு விவகாரம், காவிரி பிரச்சனை, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமருடன் அ.தி.மு.க. தலைவர்கள் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் அ.தி.மு.க. தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வைச் சேர்ந்த தேனி தொகுதியின் மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பிரதமருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/pmo5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/pmo3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/pmo2.jpg)