
டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இருவரும் பிரதமர் மோடியை நாடாளுமன்ற அலுவலகத்தில் உள்ள பிரதமர் அறையில் சந்தித்துப் பேசியுள்ளார்கள். இந்த திடீர் சந்திப்பில் தமிழ்நாடு அரசியல், சசிகலா விவகாரம், தமிழ்நாட்டில் லஞ்சஒழிப்புத்துறை மேற்கொள்ளும் ரெய்டு தொடர்பாக பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்குப்பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து, பிரதமரிடம் பேசியது தொடர்பாக விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us