ஜல்லிக்கட்டு நாயகன் என்ற பெயர் எப்படி பன்னீர்செல்வத்திற்கு கிடைத்ததோ அதேபோல் காவிரி நாயகன் என்ற பெயர் எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயம் இருக்கும் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீதி மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,
காவிரி நாயகன் என்று பெயர் வைத்து ஒருவரை அழைக்க வேண்டும் என்றால் அது எடப்பாடியார் தான். எப்படி ஜல்லிக்கட்டு நாயகன் என்ற பெயர் ஓ.பி.எஸ்சை விட்டு அவரை விரும்பவில்லை என்றாலும் அது போகாது.
வரலாற்றில் இடம்பெறக்கூடிய பெயராக காவிரி நாயகன் என்ற பெயர் எடப்பாடியாருக்கு நிச்சயமாக இருக்கும். காவிரி நாயகனும், ஜல்லிக்கட்டு நாயகனும் இணைந்து நமது தமிழகத்தை தன்னிகரில்லா நிலைக்கு எடுத்துச்செல்வதற்காக அல்லும் பகலும் பாடுப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)