தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் நேர்காணல்,தொகுதிப் பங்கீடு என பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று (04.03.2021) அதிமுகவில் விருப்ப மனுஅளித்தவர்களிடம் ஒரே நாளில் அதிமுக தலைமை நேர்காணல் மேற்கொண்டது. இந்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஓபிஎஸ் - இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் போட்டியிடும்வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவதுகுறித்துமாவட்டச் செயலாளர்களுடன் இந்த ஆலோசனைக் கூட்டம்நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.