Advertisment

ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தனித்தனியே ஆலோசனை! 

OPS- EPS Individual advice!

அ.தி.மு.க. பொதுக்குழு, உயர்நீதிமன்ற தீர்ப்பு என நாளை (11/07/2022) முக்கிய தினமாக இருக்கபோகும் நிலையில், ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Advertisment

எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதேபோல், முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்றனர். பொதுக்குழு ஏற்பாடுகள், நீதிமன்றத் தீர்ப்பை எதிர்கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது, தீர்ப்புக்கு பின் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

admk leaders
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe