ADVERTISEMENT

ஓபிஎஸ் இபிஎஸ் சண்டை;புதிதாக உருவாகும் மாவட்ட செயலாளர்கள்

09:57 PM Dec 28, 2018 | prakash

வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக பல பல வியூகங்களை வகுத்துவருகிறது. அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டி என இரண்டு அணிகள் இருக்கின்றன. அந்த இரண்டு அணிகளுக்கும் இடையே கடுமையான மோதல் கீழ்மட்ட அளவில் நடந்துவருகிறது. இந்த இரண்டு அணிகளையும் ஒருசேர கொண்டு வருவதற்கு பல முயற்சிகள் எடுத்தும் ஓபிஎஸ்சாலும், இபிஎஸ்சாலும் இணைக்க முடியவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

> அதற்காக இப்பொழுது அதிமுகவில் மொத்தமுள்ள 52 மாவட்டங்களை பிரிப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இதனால் புதிய மாவட்ட செயலாளர்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளது அதிமுக. முக்கியமான மாவட்டங்களில் அதிமுகவின் மந்திரிகளையே மாவட்ட செயலாளர்களாக அறிவிக்க இருக்கிறார்கள். அந்த வரிசையில் திருவண்ணாமலைக்கு சேவூர் ராமச்சந்திரனும், விழுப்புரத்திற்கு சிவி சண்முகமும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதே பாணியில் தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் அனைவரும் மாவட்ட செயலாளர்களாக ஆகிறார்கள் அதுபோக மீதமுள்ள இடங்களில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இப்படி அதிமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களை சரிகட்டுவதற்காக மாவட்டங்களைப் பிரித்து பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏற்ப மாவட்டங்களும் அந்த மாவட்டத்தை இணைக்கும் மண்டலங்களையும் அதிமுக உருவாக்கயிருக்கிறது.

இதன் முதல் கட்டமாக திருச்சி கரூர் மாவட்டங்களை ஒரு சில தினங்களில் பிரித்து புதிய மாவட்டத்தை அறிவிக்க இருக்கிறது அதிமுக தலைமை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT