ADVERTISEMENT

ரெய்டு பரபரப்பு... ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனையில் எஸ்.பி. வேலுமணி!

10:36 AM Aug 12, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று முன்தினம் (10/08/2021) காலைமுதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களிலிருந்து ரூபாய் 13.08 லட்சம் ரூபாய் மற்றும் நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள், தொழில் நிறுவனங்களின் பரிவர்த்தனை ஆவணங்கள், ரூபாய் 2 கோடிக்கான வைப்புத்தொகை ஆவணம், மாநகராட்சி தொடர்பான ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகள், முறைகேடு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், வேலுமணியின் வங்கிக் கணக்கு மற்றும் வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் மீதான இந்த ரெய்டு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணி, ''என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் தருவேன். இபிஎஸ், ஓபிஎஸ்சிடம் கலந்தாலோசித்துவிட்டு பதிலளிப்பேன்'' எனக் கூறியிருந்தார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமை ஆலோசனை மேற்கொண்டுவரும் நிலையில், இன்று (12.08.2021) இரண்டாவது நாளாக ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றுவரும் நிலையில், இந்த ஆலோசனையில் சோதனைக்குள்ளான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் பங்கேற்றுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT