Advertisment

“பாவம்! பியூட்டி பார்லர் தங்கச்சிமார்கள்!” -பாசத்துடன் உருகும் ஓ.பி.எஸ்.!

“சில நேரங்களில் ஓ.பி.எஸ். பிரச்சாரமும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால், எந்த ஒரு விவகாரத்தையும் அரைகுறையாகத் தெரிந்துகொண்டு, நோக்கம் போல் பேசுகிறார்.” என்றார் உசிலம்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன்.

Advertisment

சரி, ஓ.பன்னீர்செல்வத்தின் பிரச்சார உரையைக் கவனிப்போம்.

ops election campaign

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

“ஸ்டாலினுக்கு முதலமைச்சராகணும்னு ரொம்ப ஆசை. டீ குடிக்கிறதையெல்லாம் அரசியலா பண்ணுறாரு. அதுவும் வீட்ல இருந்து ஃப்ளாஷ்க்ல இருந்து கொண்டுவந்த டீயை ஊற்றி குடிக்கிறாரு. ஆனா., நாமவந்து டீ கடையே நடத்திருக்கோம். டீ கடை நடத்தின நம்மகிட்ட ஸ்டாலின் பாட்சா பலிக்குமா? பலிக்காது. ஏன்னா.. நாம தொண்டர்களோடு தொண்டர்களா வாழறவங்க. மக்களுடைய எண்ணங்களைப் புரிந்து ஆட்சி செய்பவர்கள்.

எதிர்க்கட்சியா இருந்தாலும் திமுக கையில் எடுக்கிறது வன்முறைக் கலாச்சாரம்தான். நம்ம தங்கச்சிமார் ரெண்டு மூணுபேர் சேர்ந்து பியூட்டி பார்லர் வச்சிருக்காங்க. அழகுநிலையத்தில் என்ன பெரிசா வருமானம் வரப்போகுது? பாவம்.. மணப்பெண்களுக்கு மேக்கப் போடுறதுல அஞ்சு பத்து கிடைக்கும். அங்கே போய் மாமூல் கேட்கிறாங்க.” என்று பேசினார்.

ஓ.பி.எஸ். சொன்ன டீக்கடை அரசியல் பொதுஜனத்தை சிரிக்க வைத்தது. பியூட்டி பார்லர் அரசியலோ கவரவில்லை. காரணம் - பியூட்டி பார்லர் விவகாரம் குறித்து ஒன்றும் தெரியாதவராக ஓ.பி.எஸ். இருப்பதுதான். பியூட்டி பார்லரில் என்ன நடந்தது என்பதை ஓ.பன்னீர்செல்வத்துக்காக, இங்கே ‘ரிபீட்‘ செய்கிறோம்.

ops election campaign

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் தனது வீட்டின் மாடியில் மயூரி பியூட்டி பார்லர் நடத்திவந்தார் சத்யா. வேப்பந்தட்டையில் குடியிருந்துவரும் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமாரோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தார். இவ்விருவருக்கும் இடையில் புகுந்தார் திமுக நகர செயலாளர் பிரபாகரன். ஒரேயடியாக பிரபாகரன் பக்கம் சத்யா சாய்ந்துவிட, பியூட்டி பார்லரில் தாக்குதல் நடந்தது. இந்த விவகாரத்தை அடிவாங்கிய அந்தப் பெண்ணே பெரிதுபடுத்தவில்லை. ஆனால், பிரபாகரன் எடுத்த முயற்சியால், பியூட்டி பார்லர் சிசிடிவி ஃபுட்டேஜ் ஊடகங்களில் வெளியானது. அதனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் செல்வகுமார். தற்போதைய நிலவரம் என்னவென்று தெரியுமா? அந்தப் பெண்ணோடு கைகோர்த்தபடி ஜோடியாக சுற்றித்திரிகிறார் செல்வகுமார். எல்லோருக்கும் தெரிந்த இந்த விவகாரம், துணை முதல்வரான ஓ.பி.எஸ்.ஸுக்கு தெரியாமல் போய்விட்டது. அவரும், பியூட்டி பார்லரில் திமுகவினர் மாமூல் கேட்பதாக, இஷ்டத்துக்கு அள்ளிவிடுகிறார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தப் பிரச்சாரத்துக்காகவே, அந்தக் கள்ளக்காதல் ஜோடியின் அடுத்த வீடியோவை வெளியிடப் போகிறதாம், பிரிவைத் தாங்க முடியாமல் உஷ்ணத்தில் தவிப்பவர் தரப்பு.

admk elections ops ops son politics admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe