Published on 24/07/2022 | Edited on 24/07/2022

கரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பினார்.
அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடந்த 15ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துவந்த நிலையில், கரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு இன்று வீடு திரும்பினார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டாலும் இரண்டு தினங்களுக்கு வீட்டில் ஓய்வெடுக்க அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.