
மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் 'அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு' எனத் தலைப்பிடப்பட்ட அதிமுக மாநாடு இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 51 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மொத்தமாக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மறுபுறம் ஓபிஎஸ் தலைமையில் சென்னை வேப்பேரியில் மாவட்ட கழக செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், புகழேந்தி உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
Follow Us