/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/minister434.jpg)
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. பெயரைப் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் ஆரணி நகர காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். அதில், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், தி.மு.க.வின் பெயரைப் பயன்படுத்துவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow Us