Advertisment

உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனுத்தாக்கல்!

 OPS caveat petition in the Supreme Court!

Advertisment

நடந்து முடிந்த அதிமுகபொழுதுக்குழுகூட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்ஓபிஎஸ்கேவியட்மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முரண், மோதல் என அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் கிளம்பி, கடைசியில் சலசலப்புடன் கடந்த 23 ஆம் தேதிவானகரத்தில்உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி சென்றஓபிஎஸ்ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என டெல்லியில் உள்ளஇந்தியதேர்தல் ஆணையத்தில் அவரது சார்பில் ஓபிஎஸ்தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல் பொதுக்குழுவில் 23தீர்மானங்களைத்தவிர வேறெந்த தீர்மானமும் நிறைவேற்றப்படக்கூடாதுஎனச்சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில் இந்த தீர்ப்பினை எதிர்த்து யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் வாதங்களைக் கேட்காமல் உத்தரவிடக்கூடாது எனஓபிஎஸ்உச்சநீதிமன்றத்தில்கேவியட்மனுத்தாக்கல் செய்துள்ளார்.

admk ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe