ஓ.பி.எஸ். சகோதரர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்!

O.P.S. Brother passes away of illness

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய சகோதரர் பாலமுருகன் (61). இன்று (14.05.2021) அதிகாலை 4 மணிக்குப் பெரியகுளம் தென்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த பாலமுருகன், அதற்காக சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட சில இடங்களில் சிகிச்சை பெற்றுவந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி மதுரை அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல்நிலை மிகவும் மோசமானதால் உடனடியாக சென்னைக்கு கொண்டு சென்றால் மட்டுமே உயிர் பிழைப்பார் என்ற நிலை ஏற்பட்டது. அப்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் வேண்டுகோளின்படி, அப்போதைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக ஒப்புதல் அளித்து பெங்களூருவில் இருந்து ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை மதுரைக்கு அனுப்பி, அங்கிருந்து பாலமுருகனை ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும், தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு பெரியகுளம் தென்கரையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு லதா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

brother ops Theni
இதையும் படியுங்கள்
Subscribe