
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பல்வேறு வாதங்கள் மற்றும் முறையீடுகளுக்கு பிறகு அவ்வழக்கின் நீதிபதி மாற்றப்பட்டு புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பளிக்க உள்ளது. ஓபிஎஸ் மற்றும் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்க இருக்கிற நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.
அதேநேரம் ஓபிஎஸ் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோர் ஆலோசித்து வருகின்றனர். அதேபோல் எடப்பாடி தரப்பில் அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டில் கூடியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)