ADVERTISEMENT

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! 

06:38 PM Jul 15, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 21 பேரை நீக்கி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (15/07/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துக் கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சுப்புரத்தினம், மாறன், முருகேசன், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயதேவி, திருவள்ளூர் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வளசை மஞ்சுளா பழனிசாமி, வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் பாபு, திருநாவுக்கரசு, திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜவகர், தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தயாளன், சரவணன், சதீஷ், செந்தில், பாண்டியன், பாலமுருகன், ஹரிகிருஷ்ணன், சிவக்குமார், சுகுமாரன், பரத், சதீஷ், சதீஷ்ராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கே.எஸ்.கோலப்பன் ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT