ops

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் இருக்கும் D1 பெரியகுளம் வடகரை காவல் நிலையம் இந்தியாவில் எட்டாவது சிறந்த காவல் நிலையமாக மத்திய அரசு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அதை பராட்டும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது சொந்த ஊரில் உள்ள வடகரை காவல் நிலையத்திற்கு சென்று காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனும் கலந்து கொண்டு போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின் துணை முதல்வர் ஓபிஎஸ் காவல்நிலையத்திற்கு முன் உட்கார்ந்து அனைத்து காவலர்களுடன் குரூப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

Advertisment

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ்சோ.. இது போல் தொடர்ந்து இந்த காவல் நிலையம் மக்களுக்கான சிறப்பான பணியை ஆற்ற வேண்டும் என்றும் காவலர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதுபோல் இந்தியாவிலேயே தமிழகம் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் முதல் மாநிலமாக தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய அளவில் தமிழகத்தில் பெரியகுளம் காவல் நிலையம் எட்டாம் இடத்தை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார். உடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், உதவி கண்காணிப்பாளர் உள்பட சில காவல்துறை அதிகாரிகள் இருந்தனர்.