Skip to main content

'ஒடுக்கப்பட்ட பெண்களும், அரசியல் எழுச்சியும்' -கருத்தரங்கு

Published on 21/10/2018 | Edited on 21/10/2018
sdt

 

அரசியல் அதிகாரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும், ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அரசியலாய் அணி திரள்வோம்! அதிகாரத்தை வென்றெடுப்போம்! என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னரில் இன்று காலை (அக்.21) தொடங்கியது.

 
மாநாட்டின் முதல் நிகழ்வாக காந்தியடிகள் அரங்கில் 'நெருக்கடிக்குள்ளாகும் மதச்சார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவையும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 

sdt

 

இந்நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கு.இராமகிருட்டிணன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஜமாத்தே இஸ்லாமிய ஆலோசனை குழு உறுப்பினர் ஜலாலுதீன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், கிருஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிக்கோ இருதயராஜ், மே17 இயக்கத்தின் அருள் முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் மன்பயி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் இறுதியாக மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் நன்றியுரையாற்றினார்.

 

அதேபோல் முற்போக்கு பத்திரிக்கையாளர் கெளரிலங்கேஷ் அரங்கத்தில் 'ஒடுக்கப்பட்ட பெண்களும், அரசியல் எழுச்சியும்' என்ற தலைப்பில் பெண்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விமன் இந்தியா மூமெண்ட் மாநில துணைத் தலைவர் பாத்திமா கனி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் உம்முல் தெளலத்தியா வரவேற்புரையாற்றினார். விமன் இந்தியா மூமெண்ட் மாநில தலைவர் நஜ்மா பேகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நசரத் பேகம், அக்தரி பேகம், நசீமா, ஃபரீதா, ஆமினா, ஷம்சாத், ஹாலிதா, மெஹருன்னிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்நிகழ்ச்சியில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில பொருளாளர் வி.எம்.அபுதாகிர், மாநில செயலாளர் சஃபியா நிஜாம், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில துணைத் தலைவர் ரஜியா பானு, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரிய உறுப்பினர் பாத்திமா முஸஃப்பர், எழுத்தாளர் பேராசிரியை சாந்தி, விமன் இந்தியா தேசிய தலைவர் மெஹரின்னிஷா கான், தேசிய செய்ற்குழு உறுப்பினர் வழ.சாகிரா ராஜா முகமது, விமன் இந்தியா மாநில தலைவர் நஜ்மா பேகம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் இறுதியாக மாநில செயற்குழு உறுப்பின சஃபியா நன்றியுரையாற்றினார். இந்த கருத்தரங்கு நிகழ்ச்சிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

தொடர்ந்து மதியம் 2:30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி, தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர், விசிக தலைவர் தொல் திருமாவளவன், புதுச்சேரி மாநில கங்கிரஸ் தலைவரும் புதுவை மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம், தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், ஆரிய சமாஜ்அமைப்பின் தலைவர் சுவாமி அக்னிவேஷ், அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்முகமது இஸ்மாயில் நாம் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர், ஜமாத்துல் உலமா சபையின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் டி.ஜே.எம். சலாஹுத்தின்ரியாஜி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்கள் உள்பட பலர் உரையாற்றுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதி? - வெளியான புதிய தகவல்! 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
ADMK DMDK Alliance Confirmed New information released

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது. அதே சமயம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தே.மு.தி.க. சார்பாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் அ.தி.மு..க துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் மற்றும் புதுவை 40 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 24 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

ADMK DMDK Alliance Confirmed New information released

இந்நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி நாளை (20.03.2024) உறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவில் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, தொகுதி உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. அப்போது புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகச் சென்னையில் எடப்பாடி பழனிசாமி உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.