புதுச்சேரியில் கடந்த 50 ஆண்டுகளாக மேலாக காந்திவீதி, நேரு வீதி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் தெருவோர கடைகள் செய்யப்பட்டு வருகின்றது.ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் செயல்படுவதால் இதற்கு சண்டே மார்க்கெட் என்று அழைக்கத்தொடங்கினர். இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் காந்திவீதி மற்றும் நேரு வீதியில் இயங்கிவந்த கடைகளில் அந்தப்பகுதியில் உள்ள கடைகளின் வியாபாரம் பாதிப்பதாகவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அங்குள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை அடுத்து முதலமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை எடுக்கப்படும் என்று 07 ம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தார்.

 Opposition to Sunday Marketplace announcement Merchants go in procession!

Advertisment

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காந்திவீதி மற்றும் நேருவீதியில் 2000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் 1000 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காந்திவீதியில் இருந்து ஊர்வலமாக நேருவீதி , மாதா கோவில் வீதி வழியாக சென்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமியிடம் மனு அளித்தனர். தொடர்ந்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து வியாபாரிகள் களைந்து சென்றனர்.

Advertisment