Advertisment

எதிர்க்கட்சி இருக்கை விவகாரம்; சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு

 Opposition seat issue; Order for the Speaker to reply

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாகச் சட்டப்பேரவைக் கூட்டத்திலும் சபாநாயகருக்கு அதிமுக கடிதம் அளித்தது. ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்நிலையில்,இன்று அந்த வழக்கு நீதிபதி ஹரிதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. 20 முறை கடிதம் கொடுத்தும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் எந்த மாற்ற நடவடிக்கையும் சபாநாயகர் மேற்கொள்ளவில்லை என எடப்பாடி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் எதிர்த்தரப்பான சபாநாயகரும், சட்டப்பேரவை செயலாளரும் டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் இதுகுறித்துபதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுவழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

highcourt admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe