Advertisment

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு கடையடைப்பு பேரணி

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த மசோதா (சி.ஏ.ஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றை கண்டித்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் 30,000 பேர் பங்கேற்கும் மாபெரும் கடையடைப்பு, வேலை நிறுத்தம், அமைதிப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

 Opposition rally to the Citizenship Amendment Bill

இந்த பேரணி ரஹ்மானியாபுரம் 1வது தெருவிலிருந்து தொடங்கி பேட்டை காதர் முகைதீன் பள்ளிவாசல் வழியாக சந்தை தெரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து தெற்கு அய்யாபுரம் வழியாக பஜார் ரோட்டில் சென்று பிலால் பள்ளிவாசல் வழியாக பெரிய தெரு வந்து மணிக்கூண்டு அருகே நிறைவு செய்யப்பட்டது.இந்த இடங்களை காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் துணை காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் கடையநல்லூர் ஆய்வாளர் மகாலெட்சுமி, காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார், எஸ்.பி.யின் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் வேல்முருகன், தனிப்பிரிவு ஏட்டு செய்துஅலி, மருதுபாண்டி ஆகியோர் ஊர்வலம் செல்லும் பாதைகளை மோட்டார் சைக்கிள் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

 Opposition rally to the Citizenship Amendment Bill

இதனைத் தொடர்ந்து ஐக்கிய ஜமாத்தின் நிர்வாகிகளை அழைத்து பேரணி குறித்த விவரங்களை கேட்டுக் கொண்டார் பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் அமைதியான முறையில் ஊர்வலப் பாதையில் செல்ல வேண்டும் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்காதீர் என்று ஐக்கிய ஜமாத்தார்ளிடம் காவல்துறை கேட்டுக் கொண்டது அதன்படி நடந்து கொள்வோம் என ஐக்கிய ஜமாஅத்தினர் காவல் கண்காணிப்பாளரிடம் உறுதி அளித்தனர்.

 Opposition rally to the Citizenship Amendment Bill

கடையநல்லூர் அமைதிக்கு பெயர் பெற்ற ஊர் எங்கள் ஊரில் எங்களால் எந்த இடையூறும் வராது என பேட்டை ஜமாஅத் தலைவர் சாகுல் ஹமீது எஸ்.பி.யிடம் தெரிவித்தார். நிச்சயிக்கப்பட்டபடி பரபரப்பான கடையநல்லூர் நகரம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. நகரின் ஒட்டு மொத்த ஐக்கிய ஜமாத்தார் தலைமையில் இன்று மாலை 2.30 மணியளவில் நகரின் ரகுமானியாபுரத்தில் பேரணி தொடங்கியது. பொது மக்கள் உட்பட பல தரப்பினரும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர், மேல கடையநல்லூர், பேட்டை, சந்தைப்பள்ளி வாசல் தெரு என பல பகுதிகளைக் கடந்து அமைதியான வகையில் எதிர்ப்பு பேரணி நடந்தது. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். எஸ்.பி.சுகுணாசிங் தலைமையில் பாதுகாப்பு ப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

முன்னதாக நேற்றைய தினம் எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

citizenship amendment bill nellai rally
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe