Advertisment

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

union government opposition parties leader

Advertisment

மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று (20/09/2021) எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரியும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரியும், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, விலைவாசி உயர்வைக் கண்டித்தும் காங்கிரஸ், திமுக., விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினர்.

சென்னை அண்ணாநகர் இல்லத்தில் மதிமுகபொதுச்செயலாளர் வைகோ, அன்பகத்தில் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் திமுகநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், சி.ஐ.டி. காலனி இல்லத்தில் கனிமொழி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

union government opposition parties leader

Advertisment

சென்னை அசோக் நகரில் உள்ள அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல், கே. பாலகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

congress union government
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe