ADVERTISEMENT

“எதிர்க்கட்சிகள் உருப்படியாக ஏதாவது சொல்ல வேண்டும்” - சசிகலா

12:03 PM Apr 28, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் நேற்று அதிகாலை தேர்த்திருவிழாவின் போது உயர்மின் அழுத்தக் கம்பி தேரின் மீது உரசியதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களின் உறவினர்களை வி.கே.சசிகலா நேரில் சென்று ஆறுதல் கூறினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக அரசிற்கு இந்த கோவில் சொந்தம் இல்லை என்று கூறக்கூடாது. தமிழ்நாட்டில் தான் இந்த கோவில் உள்ளது. தமிழக அரசுக்கு சொந்தம் இல்லை என்றாலும், இந்த நிகழ்ச்சி நடந்தது தமிழ்நாட்டில் தான். ஓட்டு போட்ட மக்களும் தமிழ்நாடு தான், எனவே இவர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். உரிய வழி முறைகளை ஏற்படுத்தினால், வருங்காலங்களில் இதுபோல் உயிர் பலியை தடுக்க முடியும்” என்றார்.


எதிர்க்கட்சிகள் உருப்படியாக ஏதாவது சொல்ல வேண்டும், இப்படி நடந்து விட்டது அதனால் இது சரியில்லை என்று கூற முடியாது. அதற்கு பதிலாக ஆக்கப்பூர்வமான செயலை சொல்வது தான் சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT