'நம்ம ஊரு பொங்கல்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க. எல்.முருகனுக்கு எதிர்ப்பு!

Opposition to BJP L Murugan who came to attend 'Namma Uru Pongal' program!

மதுரையில்'நம்ம ஊரு பொங்கல்' நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பா.ஜ.க. தமிழக தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வி.சி.க. மற்றும் தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பியதோடுபள்ளிவாசல் பகுதி வழியாக செல்லஅனுமதி மறுத்து வருகின்றனர்.

மதுரை திருப்பாலை மந்தைத்திடலில் பா.ஜ.க.வினர் சார்பில்'நம்ம ஊருதாமரை பொங்கல்' என்ற தலைப்பில்விழா ஏற்பாடு செய்திருந்தனர்.தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாட்டு வண்டியில் வந்தஎல்.முருகனைவரும் வழியில்தடுக்க முயன்றவிடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் தி.மு.க.வினரைபோலீசார் கட்டுப்படுத்தினர். பின்னர் அங்கிருந்த பழமை வாய்ந்த பள்ளிவாசல் பகுதி வழியாகபா.ஜ.க. மாநில தலைவர் மாட்டுவண்டியில் நிகழ்ச்சிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அந்த பகுதியைச் சேர்ந்த சிலர், பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கலைந்துச் சென்றனர். தொடர்ந்து பள்ளிவாசல் பகுதியில், அப்பகுதி மக்கள் 50- க்கும் மேற்பட்டோர் கூடியதால் பதற்றமான சூழல் ஏறப்பட்டது.

madurai vck
இதையும் படியுங்கள்
Subscribe