Opposition to BJP executive who compared actress Radhika with Parasakthi Mariamman

பா.ஜ.க. சார்பில் விருதுநகரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், வேட்பாளர் ராதிகா, அவருடைய கணவர் சரத்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisment

அக்கூட்டத்தில் பேசிய விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பாண்டுரங்கன்,“ராதிகா சரத்குமார் நல்லவர். மங்கலகரமானவர். விருதுநகர் பராசக்தி மாரியம்மனே வேட்பாளராக நமக்குக் கிடைத்திருக்கிறார்.” என்று உணர்ச்சிவசப்பட, பாஜக தொண்டர்கள் மெய்சிலிர்த்தனர். விருதுநகரில் தற்போது பராசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியிருக்கிறது.

Advertisment

ஏராளமான பக்தர்கள்21 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர்.ஆன்மீகப் பரவசம் பெருக்கெடுத்து ஓடும் இத்தருணத்தில்நடிகை ராதிகாவை,விருதுநகர் பராசக்தி மாரியம்மனுடன் ஒப்பிட்டுப்பேசியதை விருதுநகர் மக்கள் ரசிக்கவில்லை. ‘பக்தியைப் பரப்புவது போல் கோஷமிடுகிறார்கள். ஆனால், நடிகை ராதிகாவை பராசக்தி மாரியம்மனாகப் பார்க்கிறார்கள். இது முரண்பாடு அல்லவா?’ என நம்மிடம் கேள்வி எழுப்பினார் உள்ளூர் அம்மன் பக்தரான ஆறுமுகசாமி.