Advertisment

இடம் கிடைக்காத மாணவ மாணவிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு - அண்ணாமலை பல்கலை. அறிவிப்பு

university

Advertisment

சிதம்பரம் அண்ணாமலைபல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வு மூலம் வேளாண் படிப்புகளில் சேர்ந்து வருகிறார்கள்.

இதில் சுயநிதி மூலம் நடத்தப்படும் பிஎஸ்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளில் நிரப்பப்படாத இடங்களுக்கு புதிதாக தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பத்தினை பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், விருப்பமுள்ள அல்லது ஏற்கனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவமாணவிகள் மீண்டும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும்பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

education
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe