Opportunity for alliance with DMK in the coming elections - Pon. Radhakrishnan interview !!

Advertisment

2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது செய்தியாளர்களைச்சந்தித்த முன்னாள் பா.ஜ.க இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,

தற்பொழுது இருக்கின்றகூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி இனிதான் அமைக்கப்படும். சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமையலாம். தற்போது அ.தி.மு.கவுடன்கூட்டணியில் இருக்கிறோம். பா.ஜ.க அங்கம் வகிக்கும் ஆட்சிதான் அமையும்.அது அ.தி.மு.கவாகவும் இருக்கலாம் தி.மு.கவாகவும் இருக்கலாம் எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment