Opinions of parents leaving schools open to ensure the safety of children's lives

Advertisment

கரோனா தொற்று பரவலால் கடந்த மாா்ச் மாதம் தமிழகத்தில் அனைத்துப் பள்ளி, கல்லூாிகளும் மூடப்பட்டன. இதனால் பொதுத் தோ்வுகள் நடந்து கொண்டிருந்த +2 மாணவா்கள் கடைசித் தோ்வை எழுதவில்லை. மேலும் 10 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடத்தப்படவில்லை. மேலும், மற்ற வகுப்பு மாணவா்கள் அனைவரும் 'ஆல் பாஸ்' என அறிவிக்கபட்டது. இதே போல் கல்லூாிகளும் திறக்கப்படாமல் இருந்தது. பிறகு, அாியா்ஸ் மாணவா்களும் தோ்வு எழுத வேண்டாம். அவா்கள் தோ்வுக் கட்டணம் செலுத்தி இருந்தால் 'பாஸ்' என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையில் பள்ளி மாணவா்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கபட்டிருக்கும் நிலையில், வருகிற 16 -ஆம் தேதி 9,10,11,12 -ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்குப் பெரும்பாலான பெற்றோா்களும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தொிவித்துள்ளன. இதனையடுத்து, அரசு மாணவா்களின் பெற்றோா்களிடம் 9 -ஆம் தேதி கருத்துகேட்டு அதன் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது.

இதனையடுத்து, இன்று (9-ஆம் தேதி) தமிழகம் முமுவதும் உள்ள 9,10,11, மற்றும்12 -ஆம் வகுப்பு மாணவா்களின் பெற்றோா்களை பள்ளிக்கு அழைத்து பள்ளிகளை திறக்கலாமா? திறந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவீா்களா? என்ற கேள்விகளைப் பள்ளி கல்வித்துறை சாா்பில் பெற்றோா்களிடம் கேட்டு, அவா்களின் கருத்துகளை வாய்மொழியாகவும்எழுத்து மூலமாகவும் பதிவு செய்தனா்.

Advertisment

cnc

இதில், குமாி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 433 பள்ளிகளில் பெற்றோா்களிடம் கருத்து கேட்கபட்டது. இதில், பெரும்பாலான பெற்றோா்கள் பள்ளிகளை திறப்பதற்கு எதிராகக் கருத்துகளைத் தொிவித்துள்ளனா். இதுகுறித்து, நம்மிடம் பேசிய பெற்றோா்கள், இரண்டாவது கட்ட கரோனா வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணா்களும், நோய் கண்டறியும் ஆராய்ச்சியாளா்களும் கூறியுள்ளனா். அடுத்த 20 நாட்களுக்கு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று மருத்துவ நிபுணா்கள் கூறியுள்ளனா். அதற்குள் இன்னும் 6 நாட்களுக்குள் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

நம்மை விடக் குறைவாக உள்ள கேரளாவில், அந்த அரசு ஜனவாி மாதம் வரை பள்ளிகளைத் திறக்கப் போவதில்லை என்று கூறியுள்ளது. எனவே, தமிழக அரசு குழந்தைகளின் உயிருக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டு பள்ளிகளைத் திறக்கட்டும் என்றனா்.