Operation of special buses on the occasion of Ayudha Puja

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து 2 ஆயிரத்து 265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாகச் சென்னை தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய 3 பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Advertisment

இதன் மூலம் அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து வழக்கம்போல் இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் 2 ஆயிரத்து 265 என மொத்தம் 4 ஆயிரத்து 365 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களிலிருந்து 1,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.