'ஆப்ரேஷன் கந்துவட்டி'- தமிழக டி.ஜி.பி. உத்தரவு! 

'Operation Kanduvatti' - Tamil Nadu DGP Order!

கந்துவட்டி கொடுமைத் தொடர்பாக, வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், 'ஆப்ரேஷன் கந்துவட்டி' நடவடிக்கை மூலம் சட்ட அறிவுரைப் பெற்று வழக்குகளை பதியுமாறு மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு எழுதியுள்ள கடிதத்தில், "கந்துவட்டி கொடுமை தொடர்பான புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டி தொடர்பான வழக்குகளை கையாள 'ஆப்ரேஷன் கந்துவட்டி' என்ற சிறப்பு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கந்துவட்டி தொடர்பாக காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கையெழுத்துப் பெற்ற காகிதங்கள், சட்ட விரோதமான ஆவணங்கள், தொகை குறிப்பிடப்படாத காசோலைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

dgp police Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe