Opening of water in Karnataka dam for the first time in the year

Advertisment

கர்நாடகாஅணையிலிருந்து காவிரி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Advertisment

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாகத்தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக்குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 2,487கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 2,500 கன அடி நீரும் முதல் கட்டமாகத்திறக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் முதன் முறையாகக் காவிரி ஆற்றில் ஐந்தாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.