
6 மாதங்களுக்குப்பிறகு தற்போது திருச்சி காவிரி பாலம் முழுமையான போக்குவரத்து பயன்பாட்டிற்குத்திறக்கப்பட்டுள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தையும்ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவிரி பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். கடந்த 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை சீரமைப்புப் பணி நடைபெற்றது. ஆனாலும் பாலத்தில் சில பகுதிகளில் அவ்வப்போது பள்ளங்கள் ஏற்படுவது தொடர்கதையாக இருந்தது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர்.
இந்தப் பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், தொடர்ந்து கனரக வாகனங்கள் பாலத்தின் வழியாகச் செல்வதால் ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரியர்கள் முழுமையாகச் சேதமடைந்தது ஆய்வில் தெரியவந்தது. உடனடியாக பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதால், தமிழக அரசு 6 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிச் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது.
சுமார் 6.84 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட காவிரி பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். காவிரி பாலத்தின் சீரமைப்புப் பணிகள் முடிந்ததால் போக்குவரத்துக் காவலர்கள் மற்றும்காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் பயணித்து பாலத்தின்பயன்பாட்டைத்தொடங்கினர். பாலம் திறப்பதற்கான இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Follow Us