Skip to main content

அருங்காட்சியகங்கள் துறை சார்பில் சிறப்புக் கண்காட்சி துவக்கம் (படங்கள்) 

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

சென்னை அரசு அருங்காட்சியக வளர்கலை கூடத்தில் இன்று (22.12.2021) காலை சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு எனும் சிறப்புக் கண்காட்சி துவக்கிவைக்கப்பட்டது. 

 

அருங்காட்சியகங்கள் துறை சார்பில் இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு என்ற சிறப்புக் கண்காட்சி, ஆதிச்சநல்லூர் அரும்பொருட்கள் மற்றும் கீழடி அகழாய்வு மாதிரிகள் கண்காட்சி துவக்கிவைக்கப்பட்டன. 

 

இந்நிகழ்ச்சியினை தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கிவைக்க இருந்தது. இந்நிலையில், அமைச்சர் வர முடியாத காரணத்தால் துறைச் செயலாளர் இக்கண்காட்சியைத் துவக்கிவைத்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நபிகள் நாயகம் உபயோகித்த பொருட்களின் கண்காட்சி (படங்கள்)

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் மற்றும் அவரது தோழர்கள் உபயோகித்த பொருட்கள் சென்னை அம்பத்தூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
 

Next Story

சந்திராயன் மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சி (படங்கள்)

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சந்திராயன் மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சியினை மேயர் பிரியா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். உடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றனர்.