opening of schools; Minister Anbil Mahesh welcomed the students with a bouquet of flowers

Advertisment

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் முதல் வாரத்தில்பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாகத்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாகப்பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் எனப் பல தரப்புகளில் இருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து தமிழக முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனத்தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,இன்று 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கு வந்த மாணவிகளுக்குப்பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தார். இதேபோல் தமிழகத்தில் பல இடங்களிலும் மாணவர்கள்உற்சாகமாகப்பள்ளிக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்குப் பூங்கொத்து அளித்து வரவேற்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.