Advertisment

பள்ளிகள் திறப்பு: தூய்மைப் பணிகள் தீவிரம்! 

Opening of schools; Intensity of cleaning tasks!

கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் மூடப்பட்ட பள்ளிகள், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது. 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Advertisment

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ. மணிகண்ணன் அறிவுறுத்தலின் பேரில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கே. இளங்கோதை முன்னிலையில் பணிகள் நடைபெற்றுவருகிறது. திருநாவலூர் ஊராட்சி செயலாளர் முருகன் மேற்பார்வையில், 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பள்ளியைத் தூய்மைப்படுத்திவருகின்றனர்.

Advertisment

மேலும் இப்பணிகளைப் பள்ளியின் ஆசிரியர்கள்உடனிருந்து கவனித்துவருகின்றனர்.

kallakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe