அமமுக தலைவர் டிடிவி.தினகரனுக்கும்அவரது உறவினர் திவாகரனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டைதொடர்ந்து அவர்களுக்கு இடையேயான பனிப்போர் உச்சத்தை அடைந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் திவாகரன்திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்மா அணி எனும் அமைப்பையும் அதற்கானஅலுவலகத்தையும் இன்றுதொடங்கிவைத்துள்ளார்.

DIVAKARAN

அப்போது செய்தியாளர்களை சந்தித்த திவாகரன் பேசுகையில்

இனி அம்மா அணி ஒருங்கிணைப்பாளராக செயல்படுவேன்,விரைவில் சென்னையில் அம்மா அணிக்கான அலுவலகம்திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மேலும் விரைவில் ஒரு பத்திரிகையும் தொடங்க உள்ளோம்.மன்னார்குடியில்இன்று திறந்துவைக்கப்பட்ட அலுவலகம் அம்மா அணியின்மாநில அலுவலகமாக செயல்படும் என்றும்கூறினார்.

Advertisment

மேலும் அவர் டி.டி.வி தினகரன் சசிகலாவை கறிவேப்பிலை போலதான் பயன்படுத்தினார் என்றும் கூறியுள்ளார்.