நீலகிரி மாவட்டம் ஊட்டி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 353 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்.
நீலகிரியில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். முன்னதாகதோடர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகளுடன் முதல்வர் வரவேற்கப்பட்டு இந்த மருத்துவமனை திறப்பு விழாவானது இன்று நடைபெற்றது.
மொத்தம் 353 கோடி மதிப்பீட்டில் 40 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனையானது கட்டப்பட்டுள்ளது. 700 படுக்கைகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை திறப்பு விழாவில் நீலகிரி எம்பி ஆ.ராசா மற்றும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.