






Published on 28/12/2021 | Edited on 28/12/2021
இந்திய தேசிய காங்கிரஸின் 137வது நிறுவன நாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டுவருகிறது. காங்கிரஸின் 137ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதையொட்டி இன்று (28.12.2021) காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியை ரிமோட் மூலம் ஏற்றி வைத்து தலைவர்களின் உருவப்படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.