Skip to main content

பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்!

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 opening date of schools across Tamil Nadu has changed

 

தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டுக்காக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருந்தது. அதே சமயம், வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். 

 

இதனைத் தொடர்ந்து  வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்வது கடும் சிரமம் என்று ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். 

 

இந்த நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஜூன் 14 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“புகை மாசு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முடியும்” - அமைச்சர் மெய்யநாதன் 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Tamil Nadu can be made a smoke free state says Minister Meiyanathan

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு, பரதம், நடனம், கலை, இலக்கியம், பாட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் இல்லாத தண்ணீர் பாட்டில்கள் எனப் பல துறைகளிலும் தமிழ்நாட்டின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போது, இந்தப் பள்ளியின் மாணவிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்து நடக்க உள்ள மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்டோர் மற்றும் 17 வயதிற்குட்பட்டோர்களுக்கான கையுந்து பந்து, பீச் வாலிபால் போட்டிகளில் பங்கேற்கச் செல்கின்றனர்.

 

இந்த வீராங்கனைகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் தேவை உள்ளதையறிந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பள்ளிக்கு நேரில் சென்று மாநிலப் போட்டிகளில் பங்கேற்க உள்ள 27 மாணவிகளுக்கு விளையாட்டு உடை மற்றும் உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் மாணவிகள் மத்தியில் பேசும்போது, “நமக்கு ஏட்டுக் கல்வி மட்டுமே போதும் என்பதை கடந்து இந்தப் பள்ளி மாணவிகள் தொடர்ந்து விளையாட்டு, கலை போட்டிகளிலும் தனித்திறன்களை வெளிப்படுத்தி சாதித்து வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதே போல சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக எந்த ஒரு இடத்திலும் இங்கே பிளாஸ்டிக்கை காண முடியவில்லை. தண்ணீர் பாட்டில்கள் கூட பிளாஸ்டிக்கில் இல்லை என்பது சிறப்பாக உள்ளது. மேலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு கடந்த காலங்களைவிட பல மடங்கு புகை மாசு இல்லாத தீபாவளியாக கொண்டாடப்பட்டுள்ளது. இதேபோல தொடரும் பட்சத்தில் புகைமாசு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முடியும். அதுவும் மாணவர்களான உங்களால்தான் சாத்தியமாகும். 

 

நீங்கள் பிளாஸ்டிக்கை தவிர்க்கும்போது நீங்கள் உங்கள் வீட்டிலும் பிளாஸ்டிக்கை தவிர்க்க செய்வீர்கள். உங்கள் வீடுகளில் பிளாஸ்டிக் தவிர்க்கப்படும்போது உங்கள் அருகாமையில் உள்ள வீடுகளிலும் தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவீர்கள். அதனால்தான் மாணவர்களில் இருந்து பிளாஸ்டிக் தவிர்ப்பு, புகைமாசு ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை தொடங்குகிறோம். அதன் ஒரு பகுதிதான் தீபாவளியில் புகை மாசு குறைந்தது என்ற பலன். வரும் காலங்களில் சுற்றுச்சுழலை பாதுகாக்க மாணவர்களாகிய நீங்கள் சபதம் ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே எதிர்கால சந்ததி நலமுடன் வாழ முடியும். விளையாட்டோடு சேர்ந்த படிப்பு தான் உயர் கல்வியையும் உடல் ஆரோக்கியத்துடன் வேலைவாய்ப்புகளையும் பெற்றுத் தரும். படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. படிப்போடு விளையாட்டும் சேரும்போது அதற்கான சிறிய மதிப்பெண்கள் கூட இட ஒதுக்கீட்டில் கல்வியையும் வேலையையும் பெற்றுத் தருகிறது. 

 

விளையாட்டில் சாதிக்கும் வீராங்கனையாக வருகிறீர்கள். அதேபோல உங்கள் கவனம் விளையாட்டின் பக்கம் திசைமாறும்போது தீய எண்ணங்களின் பக்கம் உங்கள் சிந்தனை போகாது. அதனால் தீய பழக்கவழக்கங்கள் மறைந்து போகும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பதுடன் குற்றச் செயல்களும் குறைந்துவிடும். ஆகவேதான் விளையாட்டுடனான படிப்பு தேவை என்கிறோம். உங்களுக்கான தேவைகளை அறிந்து இந்த அரசு உங்களை ஊக்கப்படுத்தவும் உதவிகள் செய்யவும் தயாராக உள்ளது” என்றார்.

 

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை வள்ளிநாயகி, பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கொடியரசன் நன்றி கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கிய அமைச்சர் 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Minister MRK Panneerselvam gave education loans to students

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் முன்னோடி வங்கிகளுடன் இணைந்து மாபெரும் கல்விக்கடன் முகாம் மற்றும் தொழிற்கடன் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். முகாமில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்று மாணவர்களுக்கு கல்விக்கடன் மற்றும் தொழிற்கடனை வழங்கி பேசினார். 

 

அவர் பேசுகையில், “மாணவர்கள் தங்களது உயர்கல்வி அடைவதற்கு பொருளாதாரம் ஒரு மாபெரும் தடையாக உள்ளது. அதனால் மாணவர்களின் உயர்கல்வி கனவு தடைபட வாய்ப்புள்ளது. எனவே மாணவர்கள் நலனின் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கிட அனைத்து கல்லூரிகள் மற்றும் வங்கிகளை ஒருங்கிணைத்து இந்த மாபெரும் கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகின்றது. இந்த முகாமில் கலந்துகொண்டு கல்விக்கடன் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக கல்விக்கடன் வழங்கிட வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

இன்றைய முகாமில் 153 மாணவர்களுக்கு ரூ.10.84 கோடி கல்விக் கடனும், பல்வேறு அரசு மானியக்கடன் திட்டங்களின் மூலம் 64 பயனாளிகளுக்கு ரூ.10:37 கோடி தொழிற்கடனும், மொத்தம் 217 பயனாளிகளுக்கு 21.21 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது” என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். முகாமில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கெளரிசங்கர் ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ம. ராஜசேகர், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் க. பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்