ADVERTISEMENT

500 நாட்களுக்குப் பிறகு அன்னதான கூடங்கள் திறப்பு... பக்தர்கள் மகிழ்ச்சி! 

12:41 PM Sep 20, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவலின் காரணமாக கோயில்கள் மூடப்பட்டன. பிறகு தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயில்கள் திறக்கப்பட்டன. அதேசமயம், கோயில் அன்னதான கூடங்களில் அமர்ந்து உணவருந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது கரோனாவின் தாக்கம் குறைந்துவருவதால் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன், கூடுதலாக அன்னதான கூடத்தில் அமர்ந்து பக்தர்கள் உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சுமார் 548 நாட்களுக்குப் பிறகு (19.03.2020க்கு பிறகு) திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் அன்னதான கூடத்தில் கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மேற்பார்வையில் பக்தர்களை தனிமனித இடைவெளியுடன் அமர வைத்து, வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. அப்போது கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், மேலாளர் உமா ஆகியோர் உடன் இருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கோயிலில் அமர்ந்து அன்னதான உணவு அருந்தியதில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT