கடலூர், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த சமுகமேம்பாட்டு திட்டம், இந்திய தொழுநோய் சேவை மைய சார்பில் சிதம்பரம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத்திறனாளிக்கான நடமாடும் சிகிச்சை மையம் துவக்க விழா நடைபெற்றது.

 Opening Ceremony of Transplant Center for Individuals with Leprosy

Advertisment

இவ்விழாவிற்கு இந்திய தொழுநோய் சேவை மைய திட்ட மேலாளர் செயல்முறை மருத்துவர் மணிவண்ணன் வரவேற்புரையாற்றினார். புதுடில்லி டீனா மென்டீஸ் அறிமுக உரையாற்றினார். புதுடில்லி இந்திய தொழுநோய் சேவை மைய முதன்மை இயக்குநர் மருத்துவர் மேரி வர்கீஸ் தலைமையுரையாற்றி நடமாடும் சிகிச்சை மைய வாகனத்தை துவக்கி வைத்தார். கடலூர் மாவட்ட மருத்துவபணிகள் துணை இயக்குனர் டாக்டர் சித்திரைச் செல்வி. சிதம்பரம் அரசு மருத்துமனை முதன்மை குடிமை மருத்துவர் அலுவலர் மருத்துவர் தமிழரசன், வட தொரசலூர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வெறலன் ராபர்ட், சேவை முதல்வர் டின்சன் தாமஸ் கடலூர் திட்ட மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழுப்புரம் திட்ட மேலாளர் ராம் ராபர்ட் நன்றியுரையாற்றினார்.

சிதம்பரத்திலுள்ள இந்திய தொழுநோய் சேவைமையத்திற்கு மாற்றுதிறனாளிகள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் அவர்கள் இருக்கும் வீட்டுக்கே சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்படும் மேலும். அவர்கள் நகர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லுவதற்கும் இந்த வாகனத்தை பயன்படுத்தி கொள்ளலாம் எனவே பொதுமக்கள் இதனை நல்லமுறையில் பயன்படுத்திகொள்ளவேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

Advertisment