Open the Tasmak, forget the dream of coming back to power - Rajinikanth

டாஸ்மாக் கடையை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதேபோல் தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நடைமுறையில் உள்ளது,இந்நிலையில் தமிழக அரசு கடந்த7 தேதி சென்னையை தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகளை திறக்கஉத்தரவிட்டது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

Advertisment

Advertisment

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வந்தது. அதனைஅடுத்து இது தொடர்பான வழக்கில்உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. தற்போது தமிழக அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்நிலையில்டாஸ்மாக் கடையை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும்,தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில்தெரிவித்துள்ளார்.