Advertisment

சொந்த ஊருக்குள்ளேயே ஓபிஎஸ்சை நுழைய விடமால் தடுத்த மக்கள்!(படங்கள்)

ப்

Advertisment

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகாலையில் திடீரென மழை காற்றுடன் வீசிய கஜா

புயல் அருகே உள்ள தேனி மாவட்டத்திலும் வீச தொடங்கியதின் மூலம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பி பெரியகுளம் நகரில் உள்ள வராகநதி நிரம்பிவெள்ளப் பெருக்கு ஏற்பட்டதின் மூலம் நகரில் பல இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் பகுந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுபோல் ஓபிஎஸ் தொகுதியில் உள்ள குரங்கனி கொட்டகுடி ஆறு நிரம்பியதின் மூலம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .அதனால் உடனடியாக ஆற்று ஓரங்களில் உள்ள பி.சி.பட்டி., தேனி பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் 175 பேரை முன் கூட்டியே காப்பாற்றி தேனி நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். அப்படி இருந்தும் அந்த மக்கள் குடியிருந்த பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

o

Advertisment

அது போல் ஜவகர் தெரு உள்பட சில பகுதிகளிலும் உள்ள வீடுகளும் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. அதுபோல் போடி நகரிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மட்டுமல்லாமல் அங்கங்கே கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததின் மூலம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

pp

இப்படி கஜாபுயல் மூலம் ஓபிஎஸ்சின் சொந்த ஊர் மக்களும், தொகுதி மக்களும் பெரிதும் பாதிகப்பட்டனர் என்ற விஷயம் ஓபிஎஸ் காதுக்கு எட்டவே உடனே தேனிக்கு வந்தவர், அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட்டு விட்டு உடனே பெரியகுளம் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பட்டாளம்மன் கோவில் தெருவுக்கு சென்று பார்வையிட்டார். அப்பொழுது திடீரென அப்பகுதியை சேர்ந்த 50க்கும்மேற்பட்டோர் ஓபிஎஸ்சை முற்றுகையிட்டு, நீங்கள் எங்கள் பகுதிக்குள் வரக்கூடாது. ஓட்டு கேட்கும் போது இந்த பக்கம் வந்தீர்கள். அதற்கு பிறகு ஊருக்கு பலமுறை வந்தும் கூட எங்கபகுதிக்கு வந்து மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்க ஆர்வம் காட்டவில்லை. அதனால் தான் இந்த புயலில் வீடுவாசலுக்குள் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்டு இருக்கிறோம். தற்பொழுது இடைத்தேர்தல் வரும் நேரத்தில் மறுபடியும் வந்து இருக்கிறீர்களா என்று கேள்வியை எழுப்பியதுடன், மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கவேண்டும். இல்லை என்றால் ஆதார்கார்டு, ரேசன்கார்டுகளை வேண்டாம் என திரும்ப ஒப்படைப்போம் என டென்ஷனாக பேசிய மக்களை ஓபிஎஸ் சமாதப்படுத்தி உடனே அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதி கூறிவிட்டு புறப்பட்டார்.

p

சிறு வயதில் தன் தம்பி ராஜாவுடன் தென்கரை வடகரைக்கு நடுவே ஓடக்கூடிய வராகநதி ஆறு நிரம்பி ஓடுவதில் தான் குளிப்பாராம் ஓபிஎஸ். அப்படி பட்ட வராகநதி ஆறு 40வருட்களுக்கு பிறகு நிரம்பி ஓடுவதை ஓபிஎஸ் பார்த்து, ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டாராம். அதன் பின் இரவு 9 மணிஅளவில் கஜா பயலால் பாதிக்கப்பட்டு தேனி தனியார் திருமண மண்டபத்தில் குழந்தை குட்டிகளுடன் தங்கி இருந்த பொது மக்கள் 175 பேருக்கு உணவு பொட்டலம் மற்றும் பாய், தலையணை, பெட்சீட்டுகளை வழங்கி அனைவரையும் சாப்பிட சொன்னார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளும் வழங்க வேண்டும் என உடன் இருந்த மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்க்கு உத்திரவிட்டு விட்டு

புறப்பட்டார்.

p

ஆறுமணிக்கு எல்லாம் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்து தங்கவைத்தும் கூட உடனடியாக உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்காமல் ஓபிஎஸ் வந்த பின் வழங்கப்படும் என கூறி மூன்று மணிநேரமாக ஓபிஎஸ்க்காக பாதிக்கப்பட்ட மக்கள் மழையில் நனைந்த துணிகளுடன் குளிரிளும் பசியிலும் காத்து கிடந்தவர்களுக்கு தான் இரவு ஒன்பது மணி அளவில் உணவு மற்றும் பொருட்களை ஓபிஎஸ் வழங்கியதை கண்டு பாதிக்கப்பட்ட மக்கள் முகம் சுலித்தும் விட்டனர்.

op

இப்படி திடீரென வீசிய கஜா புயல் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததின் மூலம் மின் வெட்டும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதை கண்டு மாவட்ட நிர்வாகமும் அதிரடியாக மீட்பு பணியில் குதித்து போக்குவரத்தையும் மின் சாரத்தையும் ஓர் அளவுக்கு சீர் செய்தும் கொடுத்தனர். இருந்தாலும் கஜா மூலம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

gaja storm periyakulam ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe