ADVERTISEMENT

OPS உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

01:17 PM Oct 30, 2018 | rajavel



ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக மற்றும் டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ்.தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை நவம்பர் 15க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

11 பேர் விவரம்:

ADVERTISEMENT

மதுரை தெற்கு சரவணன், மேட்டூர் செம்மலை, மேட்டுப்பாளையம் சின்னராஜ், மயிலாப்பூர் ஆர்.நட்ராஜ், போடி ஓ.பன்னீர்செல்வம், கவுண்டம்பாளையம் ஆறுகுட்டி, ஸ்ரீவைகுண்டம் மாணிக்கம், வாசுதேவநல்லூர் மனோகரன், ஆவடி பாண்டியராஜன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம்.


வழக்கு விவரம்:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அதனை எதிர்க்கும் விதமாக தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை சட்டரீதியாக மேற்கொண்டு சந்திப்போம் என திமுக தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், சபாநாயகர் உத்தரவிற்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்தார்.

இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களான வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரு மனுக்களையும் ஒன்றாக இணைத்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT