Advertisment

மதுரை - போடி அகல ரயில்பாதை பணிக்கு 100 கோடி ஒதுக்கீடு! எம்.பி. ஒபிஆருக்கு பதில் அளித்த மத்திய மந்திரி!!

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது அதிமுக மக்களவை குழு தலைவரும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ஒ.பி.ரவீந்திரநாத் குமார்எழுப்பிய கேள்வியின் போது...

Advertisment

op ravindranath

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

--LINKS CODE------

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

என்னுடைய பாராளுமன்ற தொகுதியான தேனியில் மதுரையில் இருந்து போடி நாயக்கனூர் வரை செல்லும் குட்ஸ் ரயில் தடம் 1924 ல் துவங்கப்பட்டது மதுரையில் இருந்து ரமேஸ்வரத்திற்க்கும் அங்கிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இப்பகுதியில் உற்பத்தியாகும் நறுமணப் பொருட்களை கொண்டு செல்வதற்க்குஇந்த ரயில் சேவை பயன் படுத்தப்பட்டது. அதன் பின் பயணிகள் ரயில் சேவையாகவும் மாற்றப்பட்டது. சுதந்திர போராட்டத்தின் போது இந்த ரயில் சேவை முக்கிய பங்காற்றி இருக்கிறது. தேச தந்தை மாகத்மா காந்தி சுதந்திர போராட்ட வீரர்களுடன் இந்த ரயிலில் பயணம் செய்துஇருக்கிறார். இந்த மீட்டர் காஜ் ரயில் தடத்தை 304 கோடி மதிப்பில் பிராட் காஜ் ரயில் தடமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது ஆறு தாலுக்காகளை கடந்து சுமார் 25க்கும் மேற்பட்டகல்வி நிலையங்கள் வழியாக பிரதமர் மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவ மணைக்கு அருகில் செல்லும் இந்த ரயில் தடம் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இந்த ரயில் தடத்தை பிராட் காஜாக மாற்றும் பணிகளை உடனடியாக நிறைவேற்றினால் தினமும் 10 ஆயிரம் பேர் வீதம் இப்பகுதி மக்கள் பயன் அடைவார்கள் இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதற்கும் குறித்த காலத்திற்குள்என்ன நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சரிடம் கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் அளித்த மத்திய ரயில்வே அமைச்சரோ....

சுதந்திரம் பெறுவதற்கு முன்பு மகாத்மா காந்தி பயணம் செய்த ரயில் என்று உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் உணர்ச்சி மயமாக இங்கே கூறினார். அதன் பிறகு பலர் ஆட்சிக்கு வந்து போய் விட்டார்கள்.இந்த ரயில் பாதையில் 70 கிலோமீட்டர் ஏற்கனவே பிராட்காஜ் கன்வர்ஷன் செய்யப்பட்டு விட்டது. இந்த நிதி ஆண்டில் 100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது மீதியுள்ள 127 கிலோமீட்டர் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு உறுப்பினரின் தொகுதி மக்கள் பயன் அடைவார்கள் என்று பதில் அளித்துள்ளார்.

op ravindranath
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe