Advertisment

ஊட்டி மலை ரயில் இரண்டு நாட்களுக்கு இயங்காது! 

Ooty mountain train will not run for two days!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. கடந்த 6ஆம் தேதி இரவு பெய்த பலத்த மழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலச்சரிவால் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

Advertisment

தொடர்ந்து ரயில்வே பொதுப்பணி ஊழியர்கள், அங்கு பாறைகளை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதாலும், பணிகள் முழுமையாக முடியாததாலும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.எனினும், குன்னூர் - ஊட்டி இடையே மலை ரயில் தொடர்ந்து இயங்கும் என ரயில்வே நிர்வாகம் சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

nilagiri
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe